Tamil Cinema News
கமல் சாருடன் எனக்கு இருக்கும் ஆசை.. வெளிப்படையாக கூறிய இளம் நடிகை..!
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அந்த படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் தக் லைஃப் என்கிற திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து இந்திய சினிமா அளவில் எப்பொழுதுமே கமலஹாசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் வேற்று மொழியில் இருக்கும் பல நடிகர்கள் தொடர்ந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
ஆனால் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே திரைப்படங்கள் நடித்து வருவதால் மற்ற நடிகர்களுக்கு அந்த ஆசை இருந்தும் கூட அவர்களால் நடிக்க முடிவதில்லை.
இந்த நிலையில் பிரபல நடிகையான நடிகை மிர்னல் தாகூர் தற்சமயம் கமல்ஹாசனுடன் நடிப்பது குறித்து பேசி இருக்கிறார். கமலஹாசன் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு.
அதேபோல அவருடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்றும் எனக்கு ஆசை உள்ளது என்று கூறியிருக்கிறார் மிர்னல் தாக்கூர்.
