Connect with us

நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் –  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

Hollywood Cinema news

நருட்டோவை விட இவனுக்குதான் ரசிகப்பட்டாளம் அதிகம் –  ராக்லீயை பத்தி கொஞ்சம் பாக்கலாமா?

cinepettai.com cinepettai.com

ஊரெல்லாம் நருட்டோ உசுமாக்கி என சொல்லிக்கொண்டு திரியும் அளவிற்கு தமிழ் அனிமே ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் நருட்டோ சீரிஸ் பிரபலமாகி வருகிறது. ஜப்பான் மொழியில் இருந்த நருட்டோவை கார்ட்டூன் சேனலான சோனி யே தமிழ் டப்பிங் செய்ததை அடுத்து அந்த நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.

நருட்டோவில் வருகிற எல்லா கதாபாத்திரங்களுமே ஹீரோ என்றுதான் கூற வேண்டும். அதில் பலரின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் ராக்லீ. பொதுவாக அனைவரது உடலிலும் சக்ரா சக்தி இருக்கும். அதை கொண்டு அவர்கள் ஜுட்சு செய்து சண்டையிடுவார்கள். இந்த ஜுட்சு சக்திகளில் மூன்று வகை உண்டு நின் ஜுட்சு,கென் ஜுட்சு, டாய் ஜுட்சு.

நின் ஜுட்சுவும், கென் ஜுட்சுவும் மாயாஜாலம் மாதிரியான சக்திகளை கொடுக்க கூடியது. ஆனால் டாய் ஜுட்சு உடல் வலிமையை மட்டும் கொண்டு சண்டையிடும் வித்தையாகும். ராக்லீக்கு இந்த டாய் ஜுட்ஸு மட்டுமே தெரியும். அப்புறம் ஏன் எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது.

இந்த 2 ஜுட்சுவை விட டாய் ஜுட்சு சக்தி குறைவானதுதான். ஆனால் மற்ற ஜுட்சுவை கற்றுக்கொள்ள முடியாததால் டாய் ஜுட்சுவில் மாஸ்டர் லெவல் ட்ரெயினிங் எடுத்திருப்பான் ராக்லீ. இவனுக்கு ட்ரெயினிங் கொடுத்த மாஸ்டர் காய் சென்சேவும் சிறப்பான வீரர் ஆவார்.

முதன் முதலாக சேண்ட் வில்லேஜை சேர்ந்த காராவுடன் ராக்லீ மோதும்போதுதான் அவனது முழு செயல்திறன் நமக்கு தெரிகிறது. ஊரே கண்டு அஞ்சும் காராவை புரட்டி எடுக்கிறான் ராக்லீ. இனி வரும் கதைகளில் ராக்லீக்கு சிறப்பான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POPULAR POSTS

godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
viduthalai
james vasanthan vairamuthu
mgr kamarajar
12 digit masterstroke
To Top