அனிமே ரசிகர்களுக்கு அடுத்து ஒரு ட்ரீட் ! – அரக்கர்களை அழிக்கும் டீமன் ஸ்லேயர்..!
இணையதளம் உலகம் முழுக்க பரவ தொடங்கியதை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள், தமிழ் சினிமா என்கிற வட்டத்தை தாண்டி தற்சமயம் உலக அளவில் உள்ள அனைத்து திரைப்படங்கள் டிவி சீரியஸ்களை பார்க்க துவங்கியுள்ளனர்.
ஜப்பான் அனிமேஷன் தொடர்கள் இதில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. ஜப்பானில் அனிமேஷனை அனிமே என்றே கூறுவார்கள். தமிழில் ஏற்கனவே நருட்டோ மாதிரியான சில சீரியஸ்கள் பிரபலமாக உள்ளன.
அந்த வரிசையில் இன்னும் பிரபலமான ஒரு பெரிசாக டீமன் ஸ்லேயர் என்கிற சீரிஸ் பிரபலமாகியுள்ளது. இந்த சீரிஸில் இதுவரை 3 சீசன்கள் வந்துள்ளன. தற்சமயம் நான்காவது சீசனில் ஒவ்வொரு எபிசோடையும் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த சீரிஸின் கதைப்படி கதாநாயகன் டாஞ்சிரோ கமாடோ கிராமத்தில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் விறகு வெட்டுவதற்காக வீட்டை விட்டு வெகுத்தூரம் வரும் டாஞ்சிரோ நேரமாகி விட்டதால் வீட்டிற்கு செல்லாமல் வெளியிலேயே தங்கிவிடுகிறான்.

மறுநாள் காலையில் தனது வீட்டிற்கு செல்கிறான் டாஞ்சிரோ. அங்கே பயங்கரமான காட்சி ஒன்றை பார்க்கிறான். டாஞ்சிரோவின் குடும்பமே ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. ஆனால் அவனது தங்கை மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருக்க அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடுகிறான் டாஞ்சிரோ.
ஆனால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிசாசாக மாற அவளை கொல்ல ஒரு ஆள் வருகிறான். அவன்தான் டீமன் ஸ்லேயர். ஜப்பானில் அப்போது டீமன் எனப்படும் அரக்கர்கள் உலவி வருகின்றன. அவை ஜப்பான் மக்களை இரவு நேரங்களில் உண்கின்றன. அவர்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுதான் டீமன் ஸ்லேயர்.
இந்த டீமன் ஸ்லேயர் குழுவில் டாஞ்சிரோவும் சேர்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையாக உள்ளது. தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் டீமன் ஸ்லேயர் பிரபலமாகி வருகிறது.