பிரபல சீரிஸ் ஸ்குவிட் கேம் –  இரண்டாம் பாகம் எப்போ தெரியுமா?

நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் வெப் சீரிஸ்களுக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பு கூடி வருகிறது. ஏற்கனவே நெட்ப்ளிக்ஸில் வெளியான மணி  ஹெயஸ்ட் என்கிற சீரிஸ் தமிழ் மக்களிடையே பிரபலமானது. இதனால் அந்த சீரிஸ் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. அதே போலவே தற்சமயம் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்னும் சீரிஸும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

நெட் ப்ளிக்ஸில் கொரியன் சீரிஸான ஸ்குவிட் கேம் என்கிற சீரிஸ் வெளியானது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அந்த சீரிஸ் தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து அதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்.

அதிகப்படியான மக்களுக்கு பிடித்த சீரிஸாக இது அமைந்தது. ஸ்குவிட் கேம் என்பது உயிரை பறிக்கும் ஒரு விளையாட்டு ஆகும். அதில் இறுதி வரை உயிரோடு இருப்பவர்கள் கோடி கணக்கான ரூபாய் தொகையை வெல்லலாம்.

இந்த கதை இறுதியில் கதாநாயகன் தப்பித்து பிறகு இந்த கேமிங் அமைப்பிற்கு எதிராக திரும்புவதோடு முடிந்தது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் , ஸ்குவிட் கேமின் இரண்டாம் பாகம் குறித்து அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ். இதுவரை இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்நிலையில் ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகம் வெளியாகு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ்

நெட்ப்ளிக்ஸ் அறிவிப்பை காண க்ளிக் செய்யவும்

Refresh