கல்யாண கேசட்டாக வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்.. அடுத்த பிரபலத்திடம் டீலிங்.!
சமீபத்தில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இந்த வீடியோவிற்கான அக்ரிமெண்டை இரண்டு வருடத்திற்கு முன்பு நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போட்டிருந்தது.
ஆனால் தனுஷ் ஒப்புதல் கொடுக்காத காரணத்தினால் இரண்டு வருடங்களாக இந்த வீடியோ வெளியாவது குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.
சமீபத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகி இருந்தது. வெறும் நயன்தாராவின் திருமணம் என்பதை மட்டும் காட்டாமல் நயன்தாராவின் வாழ்க்கையை கூறும் விதத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
நெட்ஃப்ளிக்ஸ் முடிவு:
இந்த நிலையில் இதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காது என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் வெளியான பிறகு இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து பிரபலங்களின் திருமணத்தை ஆவணப்படமாக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
இந்த திருமணத்தையும் நயன்தாரா திருமணத்தை போலவே ஒரு வீடியோவாக செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இதற்காக நாகார்ஜுனா குடும்பத்திடம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.