Hollywood Cinema news
கேம் விளையாட போனா சோலி முடிஞ்சது… தமிழில் வெளியாக இருக்கும் Squid Game Season 2..!
இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வேற்றுமொழி படங்கள் மற்றும் சீரியஸ்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கி இருக்கின்றன.
அதற்கு முன்பு திரைப்படங்களை மட்டும் பார்த்து வந்த மக்கள் தற்சமயம் வெப் சீரிஸ்களையும் பார்க்க துவங்கியிருக்கின்றனர். அப்படியாக வேறு மொழிகளில் வரும் வெப்சீரிஸ்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக துவங்கியிருக்கின்றன.
அப்படியாக சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரிஸ் தான் ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் சீரீசை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்களத்தை கொண்ட சீரிஸ் ஆகும்.
அதாவது பணத்திற்காக கஷ்டப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை ஒரு விளையாட்டை விளையாடுவதற்காக தேர்ந்தெடுப்பார்கள். அந்த விளையாட்டில் ஜெயிப்பவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சன்மானமாக கொடுக்கப்படும்.
விறு விறுப்பான சீரிஸ்:
ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் அந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வா? சாவா? என்னும் போராட்டத்தில் தான் விளையாட்டு நடக்கும். அதில் பிழைப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
இப்படியாக எல்லா கட்டத்தையும் தாண்டி ஜெயிப்பவருக்குதான் இந்த தொகை வழங்கப்படும். இந்த நிலையில் முதல் பாகத்தில் இதற்குள் மாட்டி தப்பித்து அந்த தொகையை ஜெயித்து வெளியில் வருகிறார் கதாநாயகன். ஆனால் வெளியில் வரும்போது அந்த இறப்புகளால் கதாநாயகன் மிகவும் பாதிக்கப்படுகிறார்.
தற்சமயம் அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது இதில் கதாநாயகன் மீண்டும் அந்த விளையாட்டுக்கள் சென்று அதில் மாட்டிக்கொள்ள இருப்பவர்களை காப்பாற்ற பார்க்கிறார். இந்த நிலையில் அவரால் இந்த நபர்களை காப்பாற்ற முடிகிறதா? இல்லை மீண்டும் அந்த விளையாட்டுக்குள் சென்று இவர் மாட்டிக் கொள்கிறாரா என்பது கதையாக இருக்கிறது.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகமும் தமிழில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் 26 இந்த சீரிஸ் netflixல் வெளியாகிறது.