ராட்சசன் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால் – மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி!

தமிழ் சினிமாவில் படங்கள் வழியாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் குமாரும் ஒருவர்.

பொதுவாக இவரை இயக்குனர் ராம் குமார் என கூறினால் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ராட்சசன் படத்தின் இயக்குனர் என கூறினால் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தமிழில் சிறப்பான ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தை கொடுத்தவர் ராம் குமார்.

இதற்கு முன்பு இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே விஷ்ணு விஷாலை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான். அப்படி எடுத்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை தந்துள்ளன.

இதை தொடர்ந்து ராம் குமார் மூன்றாவது படத்தையும் விஷ்ணு விஷாலை வைத்து எடுக்கலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்கு நடிகர் விஷ்ணு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தை சத்ய ஜோதி ப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இது முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வமான அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.

Refresh