நான் சொல்றப்படி செய்! பெரிய ஆளா வருவே! –  மனோரமாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்த கவிஞர் கண்ணதாசன்!

தமிழ் சினிமாவில் நிகரற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் மனோரமா. எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மனோரமா அளவிற்கு உயிர்ப்போடு நடிக்கும் இன்னொரு நடிகை தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம்.

வெகு காலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா. ஆனால் சினிமாவிற்கு வந்தபோது அனைத்து பெண்களையும் போல இவரும் சினிமாவிற்கு வந்தபோது நடிகையாகும் ஆசையுடன்தான் சினிமாவிற்கு வந்தார்.

ஆனால் அவருக்கு வந்த வாய்ப்பு என்னவோ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் கிடைத்தது. மாலையிட்ட மங்கை என்கிற படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரமாக நடிக்க மனோரமாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. மேலும் சம்பளமும் கூட அவர்களுக்கு மிகவும் குறைவுதான்.

எனவே அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் மனோரமா. இந்த விஷயத்தை அறிந்த படத்தின் தயாரிப்பாளரான கவிஞர் கண்ணதாசன் “கதாநாயகிகள் வெகு காலத்திற்கு சினிமாவில் நிற்க முடியாது. ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு சம்பளம் குறைவு என்றாலும் அவர்கள் சினிமாவில் அதிக காலம் இருக்க முடியும்” என கூறி மனோரமாவை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.

அதே போல அவர் காலத்து கதாநாயகிகள் எல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகி கிட்டத்தட்ட இப்போதைய விஜய் அஜித் காலம் வரை சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமான படங்களை மனோரமா நடிப்பதற்கு கண்ணதாசனின் அந்த ஆலோசனையே காரணமாக இருந்துள்ளது.

Refresh