எப்போதும் பொண்ணுங்கதான் இவங்களுக்கு கிள்ளு கீரையா போச்சு!.. நெட்டிசன்களை வறுத்தெடுக்கும் பிரியா பவானி சங்கர்!..
தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். மேலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்து தற்போது பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் சமீப காலங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக அமையாத காரணங்களால் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை பிரியா பவானி சங்கர்
பிரபல தனியார் செய்து தொலைக்காட்சியான புதிய தலைமுறையின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர், பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் மக்களிடம் பிரபலமடைந்த பிரியா பவானி சங்கருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய முதல் படமான மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

மேயாத மான் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இந்நிலையில் சமீப காலமாக அவர் நடித்து வரும் படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நெட்டிசன்களை வறுத்து எடுத்த பிரியா பவானி சங்கர்
சமீப நாட்களாக பிரியா பவானி சங்கர் நடித்த எந் ஒரு திரைப்படங்களும், சரியாக வெற்றி பெறவில்லை என்பதால், அவரை ராசி இல்லாத நடிகை என அனைவரும் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் கௌதம் கார்த்தியுடன் நடித்த படம் மற்றும் கமலுடன் தற்போது நடித்த இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை தழுவியது.
இதனால் நெட்டிசன்கள் இவரை ராசி இல்லாத நடிகை அதனால் தான் இவர் நடிக்கும் அத்தனை படங்களும் தோல்வியில் முடிகிறது என கூறினார்கள்.
இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர். ஒருவரை ட்ரோல் செய்யலாம். அது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் தான். ஏனென்றால் அதனை நானும் ரசிப்பேன். நான் நடித்த படங்கள் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது என நான் சொல்ல மாட்டேன். காரணம் நானும் ஒரு ஆடியன்ஸாக பார்க்கும் போது எனக்கும் சில படங்கள் பிடிக்காமல் இருக்கும்.
ஆனால் ஒருவரை மட்டும் தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்வது நியாயமானது அல்ல. மேலும் எப்பொழுதும் இதில் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆணிற்கு இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்தது கிடையாது. ஒரு படம் சரியாக அமையவில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் அந்த நடிகரை யாரும் இவ்வாறாக கூற மாட்டார்கள். சினிமாவில் மட்டுமல்ல பொதுவான வாழ்க்கையிலும் பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்கள் என பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார்.