Connect with us

நம்ம படத்தை பத்திதான் மக்கள் பேசணும்! –  ப்ரோமஷனுக்காக வாரிசு குழுவினர் செய்த வேலை!

News

நம்ம படத்தை பத்திதான் மக்கள் பேசணும்! –  ப்ரோமஷனுக்காக வாரிசு குழுவினர் செய்த வேலை!

Social Media Bar

வாரிசு துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் தற்சமயம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. பலரும் படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பல திரையரங்குகளில் இந்த படங்கள் ஒரு வாரத்திற்கு ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன.

இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகின்றன. ஆனால் ரசிகர் மன்ற காட்சியை பொறுத்தவரை முதலில் வெளியானது அஜித் நடித்த துணிவு திரைப்படம்தான் எனலாம்.

இரண்டு திரைப்படங்களுமே டிசம்பர் 11 ஆம் தேதிதான் வெளியாகின. ஆனால் துணிவு படம் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சியில் வெளியாக இருந்தது. அப்படி படம் வெளியாகும் பட்சத்தில் துணிவு படத்தின் கருத்துக்களே மக்களை முதலில் சென்றடையும்.

இதை தெரிந்துக்கொண்ட லலித் இதற்காக வேறு வழியை கையாண்டுள்ளார். தமிழ்நாட்டில் வாரிசு படத்தின் வெளியீட்டை 777 ஸ்டுடியோஸ் லலித்தான் வாங்கியுள்ளார். எனவே அவர் வாரிசு படத்தைதான் முதலில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதற்காக பத்திரிக்கையாளர்களை அழைத்து படம் வெளியாவதற்கு முதல் நாளே வாரிசு படத்தை அவர்களுக்கு ஒளிப்பரப்பியுள்ளார். இதுக்குறித்து விஜய்யும் கூட லலித்தை புகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Bigg Boss Update

To Top