போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!…
Rajinikanth and KS Ravikumar: தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு நிறைய வெற்றி படங்களை உண்டாக்கி கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார்.
கே எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பல முக்கிய நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் கமல்ஹாசனை வைத்து அவர் கொடுத்த வெற்றி படங்கள் முக்கியமானவை. ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற படங்களை இயக்கி கொடுத்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.
கே.எஸ் ரவிக்குமார் குறித்து பலரும் அறியாத விஷயம் உண்டு என்றால் அது அவரது திரைப்படத்தில் உள்ள உணவு விஷயம்தான். விஜயகாந்த்தை போலவே கே.எஸ் ரவிக்குமாரும் உணவு விஷயத்தில் கொஞ்சம் முற்போக்கான மனிதராக இருந்து வந்தார்.

அவரது திரைப்படங்களில் பணியாளர்களுக்கு உணவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கொள்வார் விஜயகாந்த். அதே போல எப்போதும் கறி சாப்பாடு போட முடியவில்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள் அவர்களுக்கு கறி சாப்பாடு போடுவதை வேலையாக வைத்திருந்தார்.
இப்படி இருக்கும் பொழுது படையப்பா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அங்கே லைட் மேலாக பணி புரிந்த ஒரு முதியவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அன்று ஆட்டுக்கறி சாப்பாடு போடப்பட்டது அப்பொழுது கொஞ்சம் கூடுதலாக ஆட்டுக்கறி கேட்டார் அந்த முதியவர்.
இந்த நேரத்தில் அங்கு வந்த சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த நபர் தகாத வார்த்தையால் அந்த முதியவரை திட்டிவிட்டார். இதனை கேட்டதும் கே.எஸ் ரவிக்குமாருக்கு எக்கச்சக்கமாக கோபம் வந்துவிட்டது. உடனே அங்கு சென்று நீ என்னடா மயிறு அவருக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்றதுக்கு லட்ச லட்சமாக செலவு செய்து படங்களை எடுத்து வருகிறோம் ஒரு வாய் சோறு போட முடியாமல்தான் நம் நிலை இருக்கிறதா என்று சத்தம் போட்டு அவருக்கு மேலும் கறியை கே.எஸ் ரவிக்குமாரே எடுத்து வைத்திருக்கிறார்.
மேலும் அந்த சப்ளையரிடம் கூறும் பொழுது ஒரு நாளைக்கு அந்த லைட் மேன் எவ்வளவு உழைக்கிறார் தெரியுமா உன்னால் அப்படியெல்லாம் உழைக்க முடியாது உணவு விஷயத்தில் இந்த மாதிரி எல்லாம் யாரும் இனி செய்யக்கூடாது என்று கண்டித்து இருக்கிறார் இந்த விஷயத்தை கேட்ட ரஜினிகாந்த் கே எஸ் ரவிக்குமாரை அழைத்து பாராட்டி இருக்கிறார்.