Latest News
SBI, Indian Bank மற்றும் தனியார் வங்கிகளில் கட்டண உயர்வு… ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!
சாதாரண மக்களுக்கு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்வது எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தான் இன்னமும் இருந்து வருகிறது.
ஏனெனில் வங்கியின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விஷயங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு தெரிவதில்லை. குறைந்த அளவில் பேலன்ஸ் வைத்திருந்தால் பிடிக்கப்படும் தொகை வருடம் தோறும் எஸ்.எம்.எஸ் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக பிடிக்கப்படும் தொகை போன்றவை குறித்து கூட மக்களுக்கு இன்னுமே அதிகமாக ஞானம் இருப்பதில்லை.
இந்த நிலையில் தற்சமயம் வங்கியின் சில சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது ஆர்.பி.ஐ.
அறிவிப்புகள்
- அதன்படி எஸ்.பி.ஐ வங்கியில் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் மாதத்திற்கு 75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதேபோல மின் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் ₹50,000 மேல் இருந்தால் அவற்றிற்கு கூடுதலாக ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
- ஐசிஐசிஐ வங்கியில் கட்டண விகிதங்கள் மற்றும் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
- இந்தியன் வங்கியில் சிறப்பு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்ய நவம்பர் 30 தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல ரயில்வே துறைகளிலும் கூட நவம்பர் 1 முதல் வரி கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- மேலும் ரயில்வே துறையில் முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.