Actress
இன்னமும் ரெட்ட சடை வயசுன்னு நினைப்பு.. ஸ்ட்ரெக்ச்சர் தெரிய போட்டோ விட்ட ரேஷ்மா!.
Reshma Pasupuleti: வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு எவ்வளவு மௌஸ் இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்பொழுது சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சின்னத்திரையில் தங்களின் நடிப்புகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் அவர்கள் எப்பொழுதும் ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் புதிய புதிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது தான். அதனால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை பின்தொடர்ந்து அவர்களின் புகைப்படங்களுக்கு கருத்துக்களை பதிவு செய்தும், அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பிஸியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேஷ்மா பசுபுலேட்டி
தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் சீரியல்களிலும் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களின் மத்தியில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பவர்.
ரேஷ்மா தன்னுடைய வாழ்க்கையை முதலில் தெலுங்கு தொலைக்காட்சியில் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும், மற்றும் செய்தி நிருபராகவும் இருந்துள்ளார். பிறகு தமிழில் வம்சம் என்ற தமிழ் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
வம்சம் சீரியல் அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஒரு சீரியல் தொடராகும். அந்தத் தொடரில் இவர் சுப்ரியாவாக நடித்து அனைவரின் மத்தியிலும் பிரபலமாக பேசப்பட்டார்.
சீரியலில் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து ரேஷ்மாவிற்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. கடந்த 2016 ல் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு கதாபாத்திரமாக ரேஷ்மாவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ல் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
அதன் பிறகு நிறைய தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. தமிழில் வாணி வாணி ராணி தொடங்கி, சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மக்களிடையே பிரபலமானார். அதன் பிறகு நிறைய டிவி ஷோக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு ரேஷ்மா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைத்தளங்களில் ரேஷ்மா பசுபுலேட்டி
இவ்வாறு நடிப்பில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்க தவறுவதில்லை. தன் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு பெரும் ரேஷ்மா, சற்று கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களின் பார்வை தன் வசம் திருப்பி உள்ளார்.
தற்பொழுது அவர் இணையத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் இரட்டை ஜடை போட்டு கொண்டு, ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவர் இன்னும் சின்ன பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல எனவும், ஒரு சிலர் இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கிறார் எனஎவும் கமெண்ட்செய்யப்பட்டு வருகிறது.