ரோபோ ஷங்கர் மகளுக்கு பிரபலங்கள் விருந்து வைக்க இதுதான் காரணம்!.. அப்ப ரோபோ ஷங்கர் காரணம் இல்லையா!..

சமீபத்தில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் கோலாகலமாக நடந்தது. மாபெரும் பொருட் செலவில் இந்த விழாவை நடத்தியிருந்தனர். இதற்கு நடுவே தொடர்ந்து இதுக்குறித்து விமர்சனங்களும் சர்ச்சைகளும் கூட வர துவங்கின.

இந்த திருமணமானது வட இந்திய முறையில் நடந்ததே முதலில் அதிக விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு பிறகு உதட்டில் முத்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் பஞ்சாயத்து சென்று கொண்டிருந்தது. முதலில் இந்திரஜா ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்கனவே பிரச்சனைகள் சென்று கொண்டிருந்தன.

Social Media Bar

இந்த நிலையில் கார்த்திக் ரோபோ ஷங்கரின் மனைவிக்கு முத்தம் கொடுத்த வீடியோ வெளியானதும் சமூக வலைத்தளங்களே ஆடி போய்விட்டன எனலாம். இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவில் இவர்களது திருமணம் நல்லப்படியாக நடந்து முடிந்தது.

இந்த திருமணம் முடிந்ததும் சரத்குமார், ராதிகாவில் துவங்கிய சில பிரபலங்கள் அவர்களது வீட்டிற்கு இவர்களை அழைத்து விருந்து வைத்தனர். ரோபோ ஷங்கர் அவ்வளவு முக்கியமான நபரா என பார்க்கும்போது இதற்கு செய்யாறு பாலு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

இந்திரஜாவின் கணவரான கார்த்திக் ஒரு தொண்டு அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகளை வளர்த்து வருகிறார். எனவே அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே பிரபலங்கள் அவரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கின்றனர் என்கிறார் ரோபோ ஷங்கர்.