64 வயது நடிகருக்கு ஜோடியாகும் 29 வயது தனுஷ் நடிகை.. பரபரப்பான சினிமா.!

நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றன. மேலும் பாலகிருஷ்ணா நடிப்பில் பாயம்பட்டி சீனு இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ஏற்கனவே அவர்கள் இருவர் காம்போவில் உருவான திரைப்படம்தான் அகண்டா.

அகண்டா திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் பாலகிருஷ்ணா. அதில் ஒரு கதாபாத்திரம் சிவன் பக்தனாக இருக்கும். அதை வைத்துதான் கதை செல்லும்.

இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படமாக்க இருக்கின்றனர். இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இவர் தமிழில் வாத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Social Media Bar

தமிழில் வாத்தி திரைப்படத்தில் நடித்தப்போது பெரிதாக கவர்ச்சி காட்டாமல்தான் நடித்து வந்தார் சம்யுக்தா. ஆனால் தெலுங்கில் சில படங்களில் இவர் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் அகண்டா 2 திரைப்படத்தில் இவர் பாலகிருஷ்ணாவை ஒருதலை பட்சமாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.