News
நிஜ மனிதரின் கதைதான் சர்தார் – இந்தியாவின் தலைசிறந்த உளவாளி- யார் தெரியுமா?
பிரின்ஸ் படத்தை விடவும் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படமாக சர்தார் உள்ளது?. சர்தார் படத்தின் கதை குறித்து பி.எஸ் மித்ரன் கூறும்போது அது இன்னமும் சுவாரஸ்யமாக இருந்தது.

சர்தார் படத்திற்கான கதையானது ஒரு உண்மை கதையின் தழுவல் என கூறப்படுகிறது. 1980களில் இந்தியாவின் உளவுத்துறை பாகிஸ்தானுக்கு உளவுப்பார்க்க ஆட்களை அனுப்ப திட்டமிட்டது. ஆனால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடித்து தப்பிப்பதற்கான சாதுரியத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதால் இராணுவ வீரர்களை அழைத்து அவர்களுக்கு நடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு நடிப்பதற்கான பயிற்சி அளிப்பது கடினமாக இருந்ததால், நடிப்பு திறன் கொண்ட நடிகர்களை உளவு வேலைக்கு பயிற்சி அளித்தனர். அப்படி இந்திய உளவு துறையால் பயிற்சியளிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்க சென்ற நாடக நடிகர்தான் ரவீந்தர் கவுசிக்.
பாகிஸ்தான் ராணுவத்தில் சின்ன வேலைக்கு சென்ற இவர் படிபடியாக உயர்ந்து ராணுவ ஜெனரலாக மாறியுள்ளார். இந்திய இராணுவத்திற்கு அவர் தொடர்ந்து தகவல்களை அனுப்பியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த உளவாளி என இவர் அழைக்கப்படுகிறார்.
எனவே இந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் சர்தார் என படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரனே கூறியுள்ளார்.
