இந்தி சினிமாவால என்னை வாங்க முடியாது..! – மாஸ் காட்டிய மகேஷ்பாபு!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது தெலுங்கு படங்கள் பல கோக்கு மாக்கான டைட்டில்களுடன் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. தற்போது மகேஷ்பாபு “சர்காரு வாரி பாட்டா” படத்தில் நடித்துள்ளார்.
மாஸ் மசாலா ஆக்ஷன் படமான இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படம் நாளை மறுநாள் மே 12ம் தேதி ரிலீஸாக உள்ளது.
அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ்பாபு “எனக்கு இந்தி படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் அவர்களால் என்னை வாங்க முடியாது. எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு தெலுங்கு சினிமாவே போதுமானது” என்று பேசியுள்ளார்.