keerthy suresh anupama

கீர்த்தி சுரேஷிற்கு அம்மாவாக அனுபாமாவா? என்ன கொடுமை சார் இது!..

News Tamil Cinema News

Keerthy Suresh and Anupama Parameshwaran : நடிகைகளை பொறுத்த வரை சிறுவயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திலேயே ஜெயலலிதா சரோஜாதேவி போன்ற நடிகைகள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கே பெரிதாக யோசனை செய்து வந்தனர்.

ஆனால் தற்சமயம் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன உதாரணமாக காக்கா முட்டை திரைப்படம் வெளியான பொழுது இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இத்தனைக்கும் அவர் அப்பொழுதுதான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார்.

இருந்தாலும் கூட அவருக்கு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அம்மாவாக நடித்தால் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காது என்பதே பலரும் அப்படி நடிக்க யோசித்ததற்கு காரணமாக இருந்தது.

keerthy-suresh1
keerthy-suresh1

இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி திரைப்படமான சைரன் 108 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு அம்மாவாக அனுப்பாமா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிரேமம் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான அனுபாமா தமிழில் கொடி திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சொல்லப்போனால் கீர்த்தி சுரேஷிற்க்கும் இவருக்கும் ஒரே அளவிலான வயது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் சைரன் திரைப்படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷின் அம்மாவாக அனுப்பாமா பரமேஸ்வரன் நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தனைக்கும் அவர் தெலுங்கு தமிழ் மலையாளம் மூன்று மொழிகளிலும் வரவேற்பு பெற்று வரும் ஒரு கதாநாயகியாக இருக்கிறார். இருந்தும் கூட தமிழில் அவர் அம்மா கதா பத்திரத்தில் நடித்திருப்பது பெரிய விஷயமாகும்.