அந்த தயாரிப்பாளர் சொன்னது பொய்… இயக்குனர் அமீர் மீது விழுந்த பழியை துடைத்த சசிகுமார்…!

Ameer, Sasikumar and Gnanavelraja: இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல்ராஜாவிற்கு இருக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருத்திவீரன் படம் எடுத்த போது நடந்த பிரச்சனையில் ஞானவேல் ராஜா மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நடிகர் கார்த்திக்கின் 25ஆவது படம் மற்றும் ஜப்பான் படம் பிரமோசனில் கார்த்திக்கை இயக்கிய அனைத்து இயக்குனர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதற்கான காரணம் பருத்திவீரன் படப்பிரச்சனைதான் என்பதை இயக்குனர் அமீர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் மாறி மாறி தங்கள் பக்கம் இருக்கும் வாதத்தை மீடியாவில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கிடையேயான பிரச்சனையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவக்குமார் சம்பந்தப்பட்டள்ளதாக இயக்குனர் அமீர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஞானவேல்ராஜாவும் தன் பங்கிற்கு அமீர் பொய்கணக்கு காண்பித்து பணம் பெற்றதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

Social Media Bar

இதற்கிடையே இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு ஞானவேல் ராஜாவால் தான் பாதியில் நின்றது, அதன்பிறகு நான் தான் அமீர் அண்ணனுக்கு பணம் கொடுத்து இப்படத்தை முழுமையாக முடிக்க உதவி செய்தேன். ஞானவேல் ராஜா அமீர் பற்றி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி எதிர்தரப்பு தவறை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க இந்த பிரச்சனைக்கான முடிவு நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.