News
மொத்தம் 3 பாகம்.. 1000 கோடி செலவு? வேற லெவலுக்கு போகும் ‘வேள்பாரி’
சமீபத்தில் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பல பட தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் சரித்திர நாவல்கள் பக்கம் தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளார்களாம்.

அந்த வகையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து திரைப்படமாக மாற இருக்கிறது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. இந்த படத்தை சங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இதில் வேள்பாரியாக யார் நடிக்க போகிறார்? என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம் யஷ், ரன்வீர் சிங் உள்ளிட்ட சிலரிடமும் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மொத்தம் 3 பாகங்களாக உருவாக்க சங்கர் திட்டமிட்டுள்ளாராம்.
ஒவ்வொரு பாகத்திற்கும் தோராயமாக 300 கோடி என்ற கணக்கில் மொத்தமாக 3 பாகங்களும் 1000 கோடி ரூபாய் செலவில் படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வளவு பண செலவில் எடுப்பதால் பேன் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்பதால் பல மொழி சினிமாக்களிலும் உள்ள பிரபலமான நடிகர், நடிகைகளை இந்த படத்திற்குள் கொண்டு வர சங்கர் முயல்கிறாராம். ஆனால் 3 பாகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்படும் என்பதால் கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டு காலம் இந்த படத்தின் பணிகள் தொடரும் என்பதால் பலரும் தயக்கம் காட்டுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
