Bigg Boss Tamil
பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்குது.. மோசமான நிலைக்கு சென்ற ஸ்ருத்திகா.!
தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்பிருந்தே ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல வருடங்களாக பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே அங்கு நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டு பெண்ணான ஸ்ருத்திகாவிற்கு ஹிந்தி பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ருத்திகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமாக இங்கு பிரபலமடைந்தார். இந்த நிலையில் தமிழில் பிரபலமானதை அடுத்து சுருதிஹாவிற்கு ஹிந்தி பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது.
கஷ்டப்படும் ஸ்ருத்திகா:
ஹிந்தி பிக் பாஸில் சென்று கலந்து கொண்ட பிறகு ஸ்ருத்திகாவை பாலிவுட்டில் பலருக்குமே பிடிக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் விரும்பும் ஒரு போட்டியாளராக மாறினார் ஸ்ருத்திகா.
இதனை அடுத்து அங்கு இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இதனால் ஸ்ருத்திஹாவை பிடிக்காமல் போனது தொடர்ந்து இதனால் ஸ்ருதிஹாவை டார்கெட் செய்து அடித்து வந்தனர் போட்டியாளர்கள். இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஸ்ருத்திகா சமாளித்து வந்தார்.
ஆனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஸ்ருதிஹா மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறார். இதனை பார்க்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஹிந்தி பிக் பாஸில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பத் துவங்கி இருக்கின்றனர்.
