Latest News
அன்னைக்கு நான் தேம்பி தேம்பி அழுதேன்..அப்பதான் இந்த முடிவை எடுத்தேன்… எஸ்.டி.ஆர் க்கு நடந்த சம்பவம்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிம்பு. எடுத்த உடனேயே நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட அதை பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர் என்றுதான் சிம்புவை கூற வேண்டும்.
ஏனெனில் சிம்பு சினிமாவிற்கு வந்த சம காலகட்டத்தில் அவர் அளவிற்கு எடுத்த உடனே மற்ற நடிகர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஜெயம் ரவி மற்றும் தனுஷ் போன்ற நடிகர்கள் எல்லாம் அந்த வரவேற்பு பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.
ஆனாலும் சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு எல்லாம் வராமல் இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது அவ்வளவுக்கும் சிம்பு மொத்தமாக மாறி இருக்கிறார். ஒரு படத்திற்காக உடல் எடையை அதிகரிப்பது முதல் குறைப்பது வரை அனைத்தையும் செய்ய தயாராகிவிட்டார் சிம்பு.
சிம்பு சொன்ன விஷயம்:
இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது உடல் எடை அதிகரித்தது என்னை மொத்தமாக நொறுக்கிவிட்டது நான் உடல் எடை அதிகரித்து நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஓடும் காட்சி ஒன்று இருந்தது.
அதில் என்னால் சுத்தமாக ஓட முடியவில்லை. அன்று அங்கேயே உட்கார்ந்து கதறி கதறி அழுதேன். அதற்கு பிறகு எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அப்படியே பார்த்தால் அடுத்து மாநாடு திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து விட்டு நடித்தேன். அதில் ஏர்போர்ட்டில் ஓடும் ஒரு காட்சி வரும் அதில் அங்கு இருக்கும்.
அனைவரையும் விட நான் வேகமாக ஓடினேன் அப்பொழுதுதான் நான் முடிவு பண்ணினேன். தோல்வி என்பது நாம் நினைத்தால் மட்டும் தான் நடக்கும் நம்மால் முடிந்தால் எதையும் மாற்றி அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார் சிம்பு.