எஸ்கேப் ஆன சூர்யா; அஜித்தை குறி வைக்கும் சிறுத்தை?

தமிழில் பிஸியான நடிகராக வலம் வருபவர் சூர்யா. 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஜெய்பீம் போன்ற தரமான சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்து ஓடிடியில் வெளியான ஜெய்பீம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்த “எதற்கும் துணிந்தவன்” சரியான வரவேற்பை பெறவில்லை.

விஜய்க்கு வில்லனாக வரும் அதீரா..! – எதிர்பார்ப்பை எகிற விடும் தளபதி 67!

இந்நிலையில் அடுத்தடுத்து சுதா கொங்கரா, வெற்றிமாறன், பாலா உள்ளிட்ட இயக்குனர்களோடு வரிசையாக படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் சூர்யா. இதற்கிடையே பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அண்ணாத்த படம் பார்த்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டியதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு எழுதிய கதையை சில திருத்தங்களுடன் அஜித்தை வைத்து எடுக்க திட்டமிடுகிறாராம் சிறுத்தை.

அஜித் தனது அடுத்த படம் மீண்டும் எச்.வினோத்துடன் கமிட் ஆகியுள்ள நிலையில் அதற்கடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமையலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Refresh