விஜய்க்கு வில்லனாக வரும் அதீரா..! – எதிர்பார்ப்பை எகிற விடும் தளபதி 67!

விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட். சமீபத்தில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பாலும் பலர் கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர்.

Beast

இந்நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்த படமான தளபதி 66ல் பிஸியாகி உள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதற்கடுத்து தனது 67வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைகிறார்.

விஜய் – லோகேஷ் கூட்டணியில் முன்னதாக வெளியான மாஸ்டர் படம் அக்டோபர் 3ம் தேதிதான் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தையும் அக்டோபர் 3ம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கேஜிஎஃப் படத்தில் அதீராவாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Refresh