ப்ளூ பிலிம் எடுக்க போனா சைக்கோ கில்லர் வரான் – எக்ஸ் (2022) திரைப்பட விமர்சனம்

இன்னிக்கு நிலைமைக்கு, பேஸ்புக்கையே அலறவிடுற படமா இருக்குறது X அப்புடிங்கிற ஹாலிவுட் படம்தான்.

அப்புடி என்னதான் இந்த படத்துல இருக்குன்னு தேடி படம் பார்த்தா, ஹாலிவுட்ல ரொம்ப பேமஸான சினிமா ஜானர் ஒன்னு இருக்கு, அது என்னன்னா, ஸ்லாஷர். தமிழ்ல தெளிவா சொல்லனும்னா, ஜிகர்தண்டா படத்துல வர்ற ப்ரோடியூசர் சொல்லுவார்ல, எனக்கு இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்க்ஸ்டர் படம் வேணும்னு, அது மாதிரி படம் முழுக்க கொலை நடக்கிறதையே டிசைன் டிசனா காட்டுற படங்களுக்கு பேருதான் ஸ்லாஷர் மூவிஸ்.

ரஜினி கேரியரில் டொக்கு அடித்த 10 படங்கள்

பெரும்பாலும் சைக்கோக்களை மையமா வச்சும், சில சமயம், விதி, பேய்கள், விளையாட்டுக்கள் அப்புடின்னு கதை பண்ணி சும்மா ஸ்கீரின் முழுக்க இரத்தம் தெளிச்சு விளையாடுவாங்க.

இந்த ஜானர்ல எடுக்கப்பட்டுருக்குற எக்ஸ் திரைப்படத்தோட கதை என்ன, 1980களில் டெக்சாஸ் மாநிலத்தில ஒரு இளைஞி, இளைஞர் குழு நீலப்படம் எடுக்குறதுக்காக, நகரத்தோட எல்லையில இருக்கிற ஒரு வீட்டுக்கு போறாங்க. அந்த குழுவோட இயக்குனருக்கு லட்சியமே சிறந்த நீலப்படம் எடுக்கனுங்கிறதுதான். அந்த படத்தோட தயாரிப்பாளருக்கும் இதே லட்சியம்தான்.

பார்ப்பவரை பயமுறுத்தும் 10 பேய் படங்கள்

இயக்குனரோட காதலிக்கு இதுல பெரிய விருப்பம் இல்லைன்னாலும், தன்னுடைய காதலுனுக்காக குழுவில் சேர்ந்து அவங்களுக்கு டெக்னிக்கலாக உதவி செய்கிறாள். அவங்க போன இடத்துல எல்லாம் சரியா நடக்கும்போது ரெண்டு வயசான சைக்கோஸ் வந்து சேர கதை வேற லெவல்ல சூடு பிடிக்குது.

இந்த படத்தோட இயக்குனர் தி வெஸ்ட் இந்த ஜானர் படம் எடுக்குறதுல பெரிய மாஸ்டர். அதை இந்த படத்துலையும் நிரூபிச்சிருக்கார். இதுவெறுமனே ஸ்லாஷரா மட்டும் இல்லாம இன்னும் சிறந்த படமா இருக்கிறதுக்கு காரணம், செக்ஸ் பத்தி இதுல நடந்திருக்கிற முக்கியமான டிஸ்கஷன்.

செக்ஸ் ரொம்பவே இயல்பா எடுத்துக்க வேண்டிய விஷயம், மனுசனா பொறந்த எல்லாருக்கும் அது தேவை, மதம், ஜாதி, இனம்ன்னு சொல்லி அதை அழிக்காம எல்லாரும் ஜாலியா ஜல்சா பண்ணுங்ககிறதை இயக்குனர் அழுத்தமாகவே சொல்லிருக்கார். டெக்னிக்கலாவும், இந்த படம் ஸ்ட்ராங்க எடுக்கப்பட்டுருக்கு.  கதை 80களில் நடக்குதுங்கிறதை அப்புடியே நம்ப வச்சிருக்காங்க. ஸ்லாஷர் பிரியர்கள் மட்டுமின்றி, எல்லாரும் பார்க்க வேண்டிய படம். கண்டிப்பா பாருங்க..

Refresh