News
தியேட்டர் பக்கம் வர ஐடியாவே இல்லையோ? – ஓடிடியில் உலா வரும் தனுஷ்!
தமிழ்நாட்டின் கிளாஸ் மற்றும் மாஸ் நடிகரகாக இருப்பவர் தனுஷ். இதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோட முன்னாள் மருமகனும் கூட.

தொடர்ந்து முன்ணனி நடிகரகாக வலம் வந்தாலும் சமீபத்திய அவரது திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்பதோடு அவை திரையரங்கிலும் வெளியாகவில்லை என்பது ரசிகர்களை மிகவும் அதிருப்தியாக்கியுள்ளது.
கடைசியாக அவரது திரைப்படம் கர்ணன் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதற்கு பிறகு திரையரங்கிற்கு வரும்னு பலரும் பயங்கர எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் ஜகமே தந்திரம். ஆனால் அது நெட்பிலிக்ஸ் ஓடிடியில வெளியாகியது.

எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி ஜகமே தந்திரம் பெரியளவில் வெற்றியடையல. இதை தொடர்ந்து வந்த கலாட்டா கல்யாணமும் ஹாட்ஸ்டார் ஓட்டியில் வெளியானது. இது பரவலாக வெற்றியடைந்தது. ஆனால் கடைசியாக வந்த மாறன் திரைப்படமும் ஹாட்ஸ்டார்ல வந்து மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில தனுஷ் ஹாலிவுட்ல நடிக்கிற தி கிரே மேன் திரைப்படத்திலிருந்து இரு புகைப்படம் நேற்று வெளியானது.
சூப்பர்ஹீரோவாய் மாறிய தனுஷ்? – சர்ப்ரைஸ் குடுக்கும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள்!
ஆரம்பத்திலிருந்து தனுஷ் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் திரையரங்கில் வெளி வராதா அப்புடிங்கிற ஏக்கம் இருந்தது. ஆனா இதுவும் நெட்பிலிக்ஸ்லதான் வரப்போகுது. ஒருப்பக்கம் தனுஷ் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தே கிட்டத்தட்ட நீண்ட நாட்கள் ஆன மாதிரி இருக்கு. இதில அவரோட சமீபத்திய பல திரைப்படங்கள் கடுமையான தோல்வியோட பலராலும் கிண்டலடிக்கவும் பட்டிருக்கு.

தொடர் தோல்விகளில் இருந்து வெளிவரவும், தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்கவும் மீண்டும் வெற்றிமாறன் கூட ஒரு படம் பண்ண தனுஷ் முயற்சி செஞ்சாரு. அதுவும் இப்போதைக்கு நடைபெறும் சாத்தியமில்லை.
படையப்பாவை பழிவாங்க வரும் நீலாம்பரி? – தலைவர் 169 ஷாக்கிங் அப்டேட்!
தனுஷ் ரசிகர்கள், தன் தலைவரை மீண்டும் திரையரங்கில் பார்க்க மாட்டோமா என்கிற ஆசையோட தனுஷின் அடுத்த படத்திற்காக காத்திருக்காங்க.. அப்புடி திரையரங்கில் வெளிவர அடுத்து சன் பிக்சர்ஷ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் என்னும் திரைப்படம் தயாராயிட்டுருக்கு. இது தனுஷ்க்கு வெற்றியையும் குடுக்கும்னு நம்புவோம்.
