சூப்பர்ஹீரோவாய் மாறிய தனுஷ்? – சர்ப்ரைஸ் குடுக்கும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள்!

பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸை இயக்கியவர்கள் ரஸோ பிரதர்ஸ்.

இவர்கள் தற்போது க்ரேமேன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளனர். க்ரெமேன் என்ற ஆங்கில நாவலை தழுவிய இந்த படத்தில் ரியான் ரெனால்ட்ஸ், க்ரிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படையப்பாவை பழிவாங்க வரும் நீலாம்பரி? – தலைவர் 169 ஷாக்கிங் அப்டேட்!

பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷும் முக்கியமான ஒரு ரோலில் நடித்துள்ளார். இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்ற தனுஷ் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து நடித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 22ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இந்த படத்தில் தான் நடித்த காட்சியின் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபலமான சூப்பர்ஹீரோக்கள் வானிலிருந்து வந்து தரையிறங்கும்போது கொடுக்கும் த்ரீ பாயிண்ட் லேண்டிங் போஸில் அதில் தனுஷ் உள்ளார். அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர்கள் என்பதால் தனுஷுக்கு சூப்பர்ஹீரோ ரோல் கொடுத்திருப்பார்களா அல்லது போஸ் மட்டும்தானா என்பது படம் வெளியாகும்போது தெரிய வரும்.

Refresh