Connect with us

படையப்பாவை பழிவாங்க வரும் நீலாம்பரி? – தலைவர் 169 ஷாக்கிங் அப்டேட்!

News

படையப்பாவை பழிவாங்க வரும் நீலாம்பரி? – தலைவர் 169 ஷாக்கிங் அப்டேட்!

Social Media Bar

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கான பணிகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

Thalaivar 169

தற்போதைக்கு படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாததால் தலைவர் 169 என்று அழைக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி கெரியரையே க்ளோஸ் பண்ணிய படங்கள்! – ஏன் ஓடலை தெரியுமா?

இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடித்து 2000ல் வெளியாகி பயங்கரமான ஹிட் அடித்த படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் “நீலாம்பரி” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனை தவிர யாரும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனை பலரும் நீலாம்பரி என்றே அழைத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தில் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லியாக நடித்து மிகவும் பிரபலமானவர் என்பதால் இந்த படத்தில் அவருக்கு நீண்ட காலம் கழித்து மீண்டும் வில்லி ரோல் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற முழு விவரம் விரைவில் தெரிய வரும்.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

To Top