சிவாஜியால் பட வாய்ப்பை இழந்த எம்.ஜி.ஆர்… இருந்தாலும் படம் ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor MGR and Sivaji ganesan: தமிழ் திரையுலகில் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முதன் முதலாக ரசிகர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்திய நடிகர்களாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு முன்பு இருந்த தியாகராஜ பாகவதரோ அல்லது என்.எஸ் கிருஷ்ணனோ இப்படியான ஒரு போட்டியை ஏற்படுத்தவில்லை என கூறலாம். படங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் இருவருக்குமிடையே நிறைய போட்டிகள் நேரடியாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வகையில்தான் எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்தை சிவாஜி தூக்கியுள்ளார். உத்தமபுத்திரன் என்கிற திரைப்படம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர்.

Social Media Bar

அந்த படத்தின் கதையும் எம்.ஜி.ஆருக்கு மிக பிடித்திருந்தது. ஆனால் எப்படியோ உத்தம வில்லன் கதை சிவாஜி கணேசனின் கைக்கு மாறியது. இதனை தொடர்ந்து சோகத்தில் இருந்த எம்.ஜி.ஆரின் கைக்கு வந்த கதைதான் நாடோடி மன்னன்.

அந்த படத்தை எம்.ஜி.ஆரே இயக்கி நடித்தார். ஆனால் படம் வெளியானப்போது உத்தமப்புத்திரன் திரைப்படத்தை விடவும் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் திரைப்படம்தான் பெரும் வரவேற்பை பெற்றது.