ஒரு வழியா ரிலீஸ்க்கு தயாராகும் அயலான்? – ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!

நம் சினிமாவில் சில படங்கள் இப்போ வரும், நாளைக்கு வரும் என காத்திருப்போம். ஆனால் படங்கள் மட்டும் வெளி வரவே வராது. கமல் நடித்த மருதநாயக்கம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், அந்த வரிசையில் நம் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் உள்ளது.

சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கான ஒரு கதாநாயனாக மாறிவருகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்க வேண்டும் என அவரே தயாரித்து நடித்த படம்தான் அயலான். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருந்த கடன் சுமை மற்றும் நிதி பற்றாகுறையால் அந்த படத்தை முழுதாக முடிக்க முடியவில்லை.

நாட்கள் தள்ளி தள்ளி சென்றது. ஆனால் படம் மட்டும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தின் முக்கால்வாசி வேலைகளை ஒரு வழியாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். 

அடுத்த வருடம் மார்ச் 24 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அயலான் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh