Cinema History
நீதாண்டா சொல்லி கொடுத்துருப்ப? – சிவகார்த்திகேயனை ஏர்ஹோஸ்டரிடம் கோர்த்து விட்ட ஹன்சிகா
தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து சம்பளத்தையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. சிவக்கார்த்திகேயன் வளர்ந்து வந்த காலத்தில் நடித்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார்.
அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொள்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு சமயத்தில் பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்படியாக பல முறை ஹன்சிகா, சிவகார்த்திகேயன் எல்லோரும் ஏரோப்ளேனில் பயணித்துள்ளனர்.
அப்படி ஒருமுறை பயணிக்கும்போது ஹன்சிகா அங்கு சென்று கொண்டிருந்த ஏர்ஹோஸ்டரை திடீரென அழைத்தார். பிறகு ஏர்ஹோஸ்டரை பார்த்து சார் ப்ளைட்டை திருப்ப முடியுமா? என கேட்டுள்ளார். அதற்கு ஏர்ஹோஸ்டர் ஏன் என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார். இல்லை என் சார்ஜரை மறந்துவிட்டேன்? என கூறியுள்ளார் ஹன்சிகா.
உடனே அந்த ஏர்ஹோஸ்டர் பக்கத்தில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனை நீதான் இப்படி சொல்லிக் கொடுத்துயா? என்பது போல பார்த்துள்ளார். இந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் பேட்டியில் விளக்கினார்.
