Tamil Cinema News
ரஜினிகாந்த் ஆசையில் மண்ணள்ளி போட்ட எஸ்.கே.. பெரிய சண்டையா மாறுமோ..!
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாபா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவருடைய கதை தேர்ந்தெடுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருந்தும் கூட அவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து சினிமாவுக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பலர் உண்டு. அப்படியான இளைஞர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் ஒருமுறையாவது ரஜினிகாந்தை பார்த்து விட வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் ஆசையாக இருந்தது.
ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலேயே முக்கிய நடிகராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியின் திரைப்பட பெயரான மாவீரன் என்கிற பெயரில் ஒரு படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஓரளவு இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்றே கூறப்படுகிறது. சிவாஜி திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் பராசக்தி பட ஹீரோடா என கூறுவார்.
அந்த படத்தில் அந்த காட்சி அதிக பிரபலமானது. இந்த நிலையில் பராசக்தி என்கிற பெயரில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. ஆனால் தற்சமயம் சிவகார்த்திகேயன் அந்த தலைப்பில் நடிப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.
