Bigg Boss Tamil
முத்துக்குமரனுக்கு கன்னத்துலயே ஒண்ணு கொடுத்த சௌந்தர்யா நஞ்சுண்டன்.. ஷாக்கான ரசிகர்கள்.!
சௌந்தர்யா நஞ்சுண்டன் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு பிக்பாஸ் போட்டியாளராக இருந்து வருகிறார். முதல் வார எலிமினேஷன் நடந்த பொழுது அதிகமான ஓட்டு பெற்று முதலில் சேஃப் சோன் சென்றவர் சௌந்தர்யாதான்.
அதே சமயம் சௌந்தர்யா குறித்து மாற்று கருத்தும் இருந்து வருகிறது. அது என்னவெனில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக என்டர்டைன்மென்ட் செய்யாத ஒரு போட்டியாளராக இவர் இருந்து வருகிறார்.
இருந்தாலும் அவரின் அழகின் காரணமாகதான் தொடர்ந்து அவரை காப்பாற்றி வருகின்றனர் ரசிகர்கள் என கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இப்பொழுது சௌந்தர்யாவிற்கு அதிக ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய பிக் பாஸில் தன்னுடைய காதல் கதை குறித்து கூறிக் கொண்டிருந்தார் சௌந்தர்யா நஞ்சுண்டன்.
நடித்து காட்டிய சௌந்தர்யா:
அப்பொழுது தன்னுடைய மாடல் புகைப்படங்களை பார்த்து தன்னுடைய காதலர் தன்னை அடித்தது குறித்து அவர் கூறி வந்தார். அதனை கேட்ட முத்துக்குமார் அதை ஒரு என்டர்டைன்மென்ட் விஷயமாக மாற்றலாம் என நினைத்தார்.
எனவே நான்தான் இப்பொழுது சௌந்தர்யா நீ என்னுடைய காதலன். அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று செய்து காட்டு என்று கூறினார். அதேபோல நடித்துக் காட்டிய சௌந்தர்யா முத்துக்குமரனை விளையாட்டுக்கு அறைந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் இப்படி எல்லாம் சௌந்தர்யா செய்வது அவருக்கு வரவேற்பை கொடுக்க துவங்கியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இதேபோல என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருந்தால் சௌந்தர்யா பிக் பாஸில் அதிக நாட்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.