அவர் மாதிரி என்னால பாட்டு பாட முடியாது! –  கமலின் திறமையை புகழ்ந்த எஸ்.பி.பி!

தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளர்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். வெறும் நடிப்பு மட்டுமே அல்லாது பல துறைகளில் சாதனை படைத்தவர் கமல்ஹாசன்.

Social Media Bar

கமல்ஹாசன் பல படங்களை இயக்கியுள்ளார். விருமாண்டி, ஹே ராம், விஸ்வரூபம் போன்ற படங்கள் அவர் இயக்கி தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை பெற்ற திரைப்படங்கள். அதே போல பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பாடல்களில் அண்ணத்த ஆடுறார் போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இது இல்லாமல் வேறு பாடகர்கள் அவருக்காக பாடும்போது கமல்ஹாசன் ஒரு வித்தையை செய்வார். பொதுவாக நடிகர்கள் யாராக இருந்தாலும் பாடல் பாடும் காட்சிகளில் வாயில் அந்த பாடலை பாடுவார்கள். பிறகு டப்பிங் செல்லும்போது அந்த பாடலை பாடகர் பாடி மாற்றி அமைப்பார்.

ஆனால் கமல் அந்த மாதிரியான பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்புகள் அமையும் போது அந்த பாட்டையே பாட மாட்டாராம். அதற்கு பதிலாக உதட்டை மட்டும் அசைப்பாராம். ஆனால் நாம் ஸ்க்ரீனில் பார்க்கும்போது அவரது தொண்டையில் இருந்து அந்த பாடல்கள் வருவது போன்ற பிரமையை அவர் உருவாக்கியிருப்பார்.

இந்த விஷயத்தை எஸ்.பி.பி தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.