News
சூப்பர்ஹீரோவாக நடிக்கும் சூர்யா..! லோக்கியின் ரகசியம்! – செம எதிர்பார்ப்பில் விக்ரம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் ட்ரெண்டாகியுள்ளது.
படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸே படத்தில் சூர்யா நடித்திருப்பதுதான். அதை லோகேஷ் யாரிடமும் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். ஆனால் ட்ரெய்லர் வெளியாகும் முன்னரே சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள வீடியோ வெளியாகி வைரலானது.

இதனால் லோகேஷ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போதே சூர்யா இந்த படத்தில் நடித்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். ஆனால் படத்தில் என்னவாக நடித்திருக்கிறார் என்பது பற்றி சொல்லவே இல்லை.
இந்நிலையில் ட்ரெய்லரில் சூர்யா வரும் காட்சி என காட்டப்படுவதில் சூர்யாவின் கையில் இரும்பு கையுறை அணிந்திருப்பது போல உள்ளது. அதை சுட்டிக்காட்டி சூர்யா ஒரு சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

முன்னதாக லோகேஷ் தனது முதல் படமான மாநகரம் முடிந்த பின் சூர்யாவை வைத்து பிரபலமான காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான இரும்புக்கை மாயாவி கதையை படமாக எடுக்கப்போவதாக ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர் என லோக்கி ரொம்பவே பிஸி,
தற்போது விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு இரும்புக்கை இருப்பது போல காட்டுவதால் லோக்கி திட்டமிட்டபடி அடுத்து சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி கதையை எடுக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் அதற்கு முன்னோட்டமாக அந்த காட்சி இருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

