தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். வெறும் நான்கு சண்டை ஒரு டூயட் பாடலை வைத்து திரைப்படத்தை இயக்கி விடுவோம் என்று இல்லாமல் புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை முயற்சி செய்துக்கொண்டே இருப்பார் பார்த்திபன்.
பாக்கியாராஜை போலவே முதலில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகன் ஆனவர் பார்த்திபன். பார்த்திபனை கலாய்க்கும் விதமாக பிரதீப் ரங்கநாதன் தனது லவ் டுடே திரைப்படத்தில் பக்காவா இருந்த பையனை இப்படி பார்த்திபன் மாதிரி ஆக்கிட்டீங்களேடா என கூறியிருப்பார்.
இந்த வசனம் குறித்து பார்த்திபன் பேசும்போது “கோமாளி திரைப்படம் வெளியானப்போது அதன் கதையை பிரதீப் ரங்கநாதன் திருடி படம் எடுத்துவிட்டார் என அவர் மீது குற்றச்சாட்டு வந்தது. அப்போது பாக்கியராஜுடன் நாங்கள் அதை விசாரித்து பிரதீப் ரங்கநாதனிடம் இருந்து அவருக்கு இழப்பீடு பெற்று கொடுத்தோம்.
அதற்கு பழி வாங்கும் விதமாக பிரதீப் இப்படியான ஒரு விஷயத்தை செய்துள்ளார் என பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.