Tag Archives: ratnam

தயவு செஞ்சு என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க!.. நிருபரிடம் கடுப்பான விஷால்!..

தமிழ் சினிமா நடிகர்களில் மிக பிரபலமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை விஷால் படத்தில் அதிகமாக அவர் நகைச்சுவை செய்வதை பார்க்க முடியும்.

அது அவருக்கு ஓரளவு செட் ஆகிறது என்றே கூறலாம். சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார் விஷால்.

vishal1

இதற்கு நடுவே அவருக்கு கடன் தொடர்பாக இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் தற்சமயம் ரத்னம் திரைப்படம் வெளியாகும்போது கூட சில பிரச்சனைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசிய தொகுப்பாளர் ரமணநந்தா என்னும் நபரின் கடன் பிரச்சனையை பேசியதும் விஷால் கொஞ்சம் கோபமாகிவிட்டார். வாழ்க்கையில் நான் சில கெட்ட வார்த்தைகள், பெயர்களை எல்லாம் திரும்ப கேட்கவே கூடாது என நினைக்கிறேன்.

எனவே அதை பற்றி பேசாதீங்க வேற ஏதாவது பேசலாம் என பேசியிருக்கிறார்.

நல்ல படம் எடுத்திருக்கீங்கன்னா எதுக்கு கில்லி படத்துக்கு பயப்படுறீங்க!.. ரத்னம் படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே.எஸ் ரவிக்குமார்!..

விஷால் நடிப்பில் தற்சமயம் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார்.

ஆனால் நேற்றிலிருந்து இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே கிடைக்காமல் இருந்து வந்தன. இதனால் கடுப்பான விஷால் இன்று காலை கூட இதுக்குறித்து ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் கில்லி படத்தின் மறுவெளியீட்டால்தான் இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை எனவும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் புது படங்களை விடவும் மறு வெளியீட்டு படங்களில் திரையரங்குகளுக்கான பங்கு அதிகம். லாப நோக்கில் பார்க்கும்போது ரத்னம் திரைப்படத்தை விடவும் கில்லி திரைப்படம் திரையரங்குகளுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

ghilli

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது ஒரு படம் மறுவெளியீடு ஆக கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும். அது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரின் உரிமை. திரையரங்கில் அதுவும் ஒரு வகை வியாபாரம்தானே நாம் எப்படி அதில் கை வைக்க முடியும்.

நல்ல படமாக இருந்தால் எதுக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை. ஒருவேளை ரத்னம் நல்ல படம் என பேச்சுக்கள் இருந்தால் அடுத்த வாரம் அதன் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் அடுத்த வாரம் தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. பிறகு எப்படி திரையரங்கு அதிகரிக்கும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதுதான் தற்சமயம் அவரது படத்திற்கு குறைவான திரையரங்கம் கிடைக்க காரணம் என ஒரு பக்கம் பேச்சு உள்ளது.

ratnam

மறுப்பக்கம் கில்லி திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதில் திரையரங்குகளுக்கு உரிமை தொகையும் அதிகமாக இருப்பதால அவர்கள் விஷால் படத்தை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான விஷால் காலையிலேயே சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் எந்த பயமும் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து சென்று கொண்டுள்ளது. இந்த வருடம் ராட்டினத்தில் சுற்றுவது போல்தான் தயாரிப்பாளர்களின் நிலை உள்ளது. என்னை போன்ற போராளியை உங்களால் சாய்க்க முடியாது. தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்தே தீரும்.

இங்கு யாரும் பொழுதுப்போக்குக்காக படம் தயாரிக்க வரவில்லை. அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. அது வாழ்வதற்கு படம் ஓட வேண்டும் என கூறியுள்ளார் விஷால்.

இந்த பதிவு தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஷாலை சுற்றி நடக்கும் மர்மங்கள்!.. அன்னைக்கு இண்டர்வியூல பேசினதுதான் காரணமா?.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஷால். அவருக்கு கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நாளை இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் பூஜை என்னும் படத்தில் நடித்துள்ளார் விஷால். இந்த நிலையில் ரத்னம் திரைபடத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நாளை திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சில பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் விஷால்.

விஷால் ஏற்கனவே நடித்த திரைப்படங்களில் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த தொகையை கொடுத்தால்தான் நாளை ரத்னம் திரைப்படத்தை வெளியிட முடியும் என கூறி சில பகுதிகளில் பிரச்சனை செய்து வருகின்றனராம் விநியோகஸ்தர்கள்.

சில நாட்களுக்கு முன்பு விஷால் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணல்களுக்கு சென்றார். அங்கு அவர் பேசும்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தீபாவளி சமயத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்களை செய்தது. அதனால் அவர்களுடன் பிரச்சனை ஆகி விட்டது என கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் விஷாலுக்கு எதிராக இப்படியான விஷயங்களை செய்கின்றன என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அந்த மாதிரி பாவத்தை எல்லாம் சுந்தர் சிக்கு எப்போதும் பண்ண மாட்டேன்!.. திட்டவட்டமாக கூறிய விஷால்!.

செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். திரைத்துறையில் பெரிய படங்கள் வருவதால் சின்ன படங்களை தேதி மாற்றி ரிலீஸ் செய்துக்கொள்ள சொல்லும் அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதனால் விடுமுறை அல்லது விழா நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்களே வெளியாகின்றன. இதே போல போன வருடம் தீபாவளிக்கு விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட இருந்தப்போது உதயநிதி அதை வேறு தேதியில் வெளியிட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

actor vishal

இதனால் விஷாலுக்கும் ரெட் ஜெயண்டுக்கும் இடையே பிரச்சனையானது. பல பேட்டிகளில் விஷாலே இந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதே தேதியில்தான் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படமும் வெளியாக இருந்தது. ஆனால் ஏனோ சுந்தர் சி அந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைத்துள்ளார். இந்த நிலையில் இதற்கு விஷால்தான் காரணமா எனக் கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள்.

இதற்கு பதிலளித்த விஷால் கூறும்போது சுந்தர் சி எனக்கு அண்ணன் மாதிரி அவர் படத்தை தள்ளி வெளியிட சொல்ல நான் யாரு? அந்த மாதிரியான பாவத்தை நான் என்னைக்கும் சுந்தர் சி அண்ணனுக்கு பண்ண மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது!. என் வாயை கிளறாதீங்க!.. பயில்வான் ரங்கநாதனுக்கு விஷால் கொடுத்த சவுக்கடி பதில்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பூஜை திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி போட்டு விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம்.

வழக்கமாகவே இயக்குனர் ஹரியின் திரைப்படங்களில் சண்டைக்கும் இரத்தத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஓவர் லோடாக போயுள்ளது என்றே கூற வேண்டும். படத்தின் ட்ரைலரை பார்த்தப்போதே இதில் சண்டை காட்சிகள் அதிகம் என தெரிந்தது.

actor vishal

இதுக்குறித்து இயக்குனர் ஹரியிடம் கேட்குபோது எவ்வளவோ குற்றங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவை எதையும் எதிர்த்து நாம் கேள்வி கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களில் அவற்றை எதிர்த்து பேசுவதோடு சரி. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அதை எதிர்க்க வேண்டும் என்பதைதான் நான் படத்தில் காட்டியுள்ளேன் என கூறியிருந்தார் ஹரி.

இந்த நிலையில் சின்ன படங்கள் தோல்வியடைவதை பற்றி விஷால் பேசி கொண்டிருக்கும்போது மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு மாதிரியான குறைந்த பட்ஜெட் படங்களும் நல்ல வெற்றியை கொடுக்கின்றனவே என கேட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இதனால் கடுப்பான விஷால் அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் ஒரு பொது செயலாளராக இருக்கேன். என்னுடைய வாயை கிளறாதீங்க என வெடித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை பேசுகிறார் என்பதே விஷாலின் கோபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.