Connect with us

சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் ‘வெந்து தணிந்தது காடு 2’ – கெளதம் மேனன் கொடுத்த shock update

Latest News

சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் ‘வெந்து தணிந்தது காடு 2’ – கெளதம் மேனன் கொடுத்த shock update

Social Media Bar

நடிகர் சிம்பு நடிக்க, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து இரண்டு வருடங்களும் கடந்துவிட்ட நிலையில், ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கெளதம் மேனன் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் – தனுஷ் காம்போ எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோலவே சிம்பு – கெளதம் மேனன் காம்போவும் அனைவருக்கும்  பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது. இவர்களது காம்போவில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல திரையரங்குகளில் இன்றும் ரீ-ரிலீஸ் செய்யபட்டும் வருகிறது. 

இந்நிலையில், இவர்கள் காம்போவில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. சிம்புவின் நடிப்பு, கெளதம் மேனனின் மேக்கிங், ஏ.ஆர். ரஹ்மான் இசை என  இந்த படம் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் இப்படத்தை நிறைவு செய்தது மட்டுமில்லாமல், இரண்டாம் பாகம் கட்டாயம் வெளிவரும் எனவும்  படக்குழுவினர்  தெரிவித்து இருந்தனர். இதனை நம்பி காத்திருந்து இரண்டு வருடங்களும் கடந்து விட்டது என ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், ‘வெந்து தணிந்தது காடு 2’  குறித்து கெளதம் மேனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று வெளியாகும் ‘ஜோஷுவா’  திரைப்பட புரமோஷனுக்கு இடையில், கெளதம் மேனனிடம் ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மேனன், தானும் ஜெயமோகனும் சேர்ந்து இரண்டாம் பாகத்திற்கான கதையை முன்பே உருவாக்கி விட்டதாக கூறினார்.

மேலும், சிம்புவிற்கும் தயாரிப்பாளர்  வேல்ஸ்-க்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும் அது தீர்ந்து விட்டால்  ‘வெந்து தணிந்தது காடு 2’  படபிடிப்பு தொடங்கிவிடும் எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். 

இது சமூக வலைதளத்தில் வைரல் ஆக, அவர்கள் பிரச்சனை எப்போ முடிஞ்சு, எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி, என்னைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.  

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top