News
அப்பா பிள்ளை ரெண்டு பேருமே ட்வின்ஸாம் – குழப்பும் மார்க் ஆண்டனி கதை
வித்தியாசமான கதைகளம் என்பதை தாண்டி, குழப்பமான கதைகளை படமாக்குவதும் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் கோப்ரா திரைப்படத்தில் வருவது போல பல கெட்டப்களில் ஹீரோக்கள் திரையில் வருவது என்பது ரசிகர்களால் வரவேற்கப்படும் விஷயமாக உள்ளது.

அந்த வகையில் தற்சமயம் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஷாலுக்கு அப்பாவாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடிக்கிறார்களாம்.
இதற்கு முன்பு ஜீன்ஸ் என்கிற படத்தில் இதே போல நாசர், பிரசாந்த் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கதையில் இன்னும் மாற்றமாக சில விஷயங்கள் உள்ளன. படத்தின் கதையானது ஐந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கிறதாம். இந்த ஐந்து காலக்கட்டங்களிலும் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் ஐந்து விதமான கெட்டப்களில் வருகிறார்களாம்.
அனேகன் படத்தில் வருவது போல ஜென்ம ஜென்மமாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு குழப்பமான கதையை படத்தில் பார்வையாளர்களுக்கு எந்த அளவில் விளக்க போகிறார்களோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
