என்னை விரட்டிட்டாங்க… அப்போதே கன்னட மொழி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் ஐந்து இடத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.

ரஜினிகாந்திற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் தன்னுடைய 70 வது வயதில் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இளம் நடிகர்கள் கொடுக்கும் வசூலை கொடுத்தது கிடையாது என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான நடிகர்கள் கூட அந்த வயதில் பெரிதாக சினிமாவில் சாதனை எதுவும் செய்யவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மட்டுமே இன்னமும் ஒரு மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார். பெங்களூரில் ஒரு சாதாரண பேருந்து நடத்தனராக வேலை பார்த்து வந்தவர் தான் ரஜினிகாந்த். அப்பொழுதே அவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது.

அப்பொழுது கர்நாடகாவில் உள்ள ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவருக்கு பாலச்சந்தரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நடிப்பு திறமையை பார்த்து பாலச்சந்தர் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார்.

Social Media Bar

ரஜினியும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விஷயங்கள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனால் அதற்கு முன்பே ரஜினிகாந்த் இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நான் ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் தான் வாய்ப்பு கேட்டேன் அப்பொழுது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த நடிகர் ராஜ்குமார் நான் கருப்பாக இருக்கிறேன் எனக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என கூறி அனுப்பி விட்டார்.

அதற்கு பிறகு பாலச்சந்தர்தான் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார். எனவே மொழி என்பது நமது கருத்துக்களை சொல்ல பயன்படும் ஒரு கருவி மட்டுமே அதை கடவுளாக பார்க்காதீர்கள் எந்த மொழியிலும் பேசலாம் அது நமக்கு புரிந்தால் மட்டும் போதும் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.