இனி எடை விஷயத்தில் ஏமாற்ற முடியாது..! ரேசன் கடைக்கு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

நியாய விலை கடைகளில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகள் என புத்தகம்தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பிறகு அதற்கு பதிலாக க்யூ.ஆர் கோடுகளை கொண்ட ஸ்மார்ட் கார்டு என்னும் முறை கொண்டு வரப்பட்டது

இதன் மூலமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ரேஷன் கார்டு புதிதாக கொடுக்க தேவையில்லை என்கிற நிலை வந்தது. ஸ்மார்ட் கார்டு காணாமல் போனால் கூட எளிதாக ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கி கொள்ள முடியும். நிலைமை இப்படியிருக்க இதில் ஒரு சிக்கலும் இருந்து வந்தது.

அதாவது ஒரு குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வந்து ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற முறை இருந்து வருகிறது. வயது முதிந்தவர்கள் மற்றும் ரேஷன் கடைக்கு வர முடியாத நிலையில் இருப்பவர்கள் வேறு ஒரு நபர் தங்களது ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு அனுமதி பெற்று தர வேண்டும்.

Social Media Bar

அப்போதுதான் வயது முதிர்ந்தவர்களின் பொருட்களை அவர்கள் கூறும் இன்னொரு நபர் வாங்க முடியும். ஆனால் அதற்கு விண்ணப்பித்து ஒப்புதழ் பெறுவதில் தாமதம் இருந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த நிலையில் இதை எளிமையாக்கும் வகையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை ஒரு விஷயத்தை செய்துள்ளது.

இந்த மாற்றுதழ் விண்ணப்பங்களை எளிமையாக https://tnpds.gov.in/ தளத்தின் மூலமாக விண்ணப்பிக்க முடியும். மேலும் எடை விஷயத்திலும் ஊழல் நடப்பதால் அதற்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதாவது ரேஷன் பொருட்களை எண்ட்ரி செய்யும் பி.ஓ.எஸ்  மெஷினோடு எடை மெஷினை இணைக்க உள்ளனர்.

இதன் மூலம் எடை மெஷனில் பொருட்கள் என்ன அளவில் காட்டுகிறதோ அதே அளவில்தான் பி.ஓ.எஸ் மெஷினிலும் எண்ட்ரி ஆகும். இந்த முன்னெடுப்புக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.