காசுக்காக இதை பண்ணியிருக்க வேண்டாம்.. அமலாக்க துறையிடம் சிக்கிய தமன்னா…

வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை தமன்னா இருந்து வருகிறார். வெகு காலங்களாகவே இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. இப்பொழுது பாலிவுட்டிலும் கூட புகழ்பெற்ற நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை தமன்னா.

நிறைய விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அப்படியாக சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்தது அவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. HPZ டோக்கன் என்கிற ஒரு செயலியின் விளம்பரத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

வழக்கில் சிக்கிய தமன்னா:

thammanah
thammanah
Social Media Bar

இந்த செயலியானது பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பணத்தின் மீது முதலீடு செய்வது குறித்த செயலியாகும். இதில் தமன்னா விளம்பரம் செய்திருந்தார்.

இதனை அடுத்து பலரும் இந்த செயலி மூலமாக முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் இந்த செயலியை நடத்துபவர்கள் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த செயலி மீது தற்சமயம் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமன்னா இந்த செயலி விளம்பரத்தில் நடித்திருந்த காரணத்தினால் அவரையும் அமலாக்க துறையினர் அழைத்துச் சென்று இருக்கின்றனர் இதனை தொடர்ந்து ஆறு மணி நேரம் தமன்னாவிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இது தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.