எஸ்.கேவே பண்ணும்போது இவர் பண்ண மாட்டாரா? சிம்பு எடுத்த திடீர் முடிவு.. ஆதரவு தந்த ரசிகர்கள்.!

நடிகர் சிம்பு சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். சிம்புவுக்கான மார்க்கெட் ஏறி இறங்கினாலும் கூட அவருக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் இருந்து வருகிறது.

சிம்பு மன்மதன், கோவில் மாதிரியான படங்களில் எல்லாம் நடித்தப்போது அவருக்கென இருந்த ரசிகப்பட்டாளம் மிக பெரிது. முக்கியமாக பள்ளி சிறுவர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தனது உடல் நிலை மீது கவனம் காட்டாமல் விட்டு விட்டார் சிம்பு. இதனை தொடர்ந்து அவருக்கு உடல் எடை அதிகரித்தது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்த நிலையில் மீண்டும் மாநாடு திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்தார் சிம்பு.

Social Media Bar

தொடர்ந்து மீண்டும் அவர் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. அப்படியாக தற்சமயம் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மிக முன்னதாகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி பல படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது பலருமே அறிந்த விஷயம்தான். இந்த நிலையில் சிம்புவும் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் எப்படியும் குறைந்த பட்ஜெட் படங்களைதான் இவர் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிம்புவுடைய அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.