ரசிகர்கள் கலாய்ச்சா இதுக்கூட நடக்குமா? – மொத்த படத்தையும் மாற்றிய ஆதிபுருஷ் குழு..!
ரசிகர்கள் நினைத்தால் ஒரு படத்திற்கு போஸ்டர் ஒட்டலாம், பிரபலங்களுக்காக நன்மைகள் செய்யலாம் என்றெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் சினிமா ரசிகர்கள் நினைத்தால் ஒரு திரைப்படத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பது ஆதிபுருஷ் திரைப்படத்தில் உண்மையாகியுள்ளது.
ராமாயண கதையை அனிமேஷனில் எடுத்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்தார். போன வருடம் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியானது.
வழக்கமாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே அவை அவ்வளவு நன்றாக வருவதில்லை. அதே போல ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரைலரும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் சினிமா ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர்.

படம் வெளியானால் அதை மக்கள் பார்க்க வருவார்களா? என்பதே சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் மொத்த படத்தையும் மீண்டும் ரீ எடிட் செய்து, அனிமேஷன் வேலைகளை வேறு நிறுவனத்திடம் கொடுத்து நல்ல முறையில் அனிமேஷன் செய்தனர் படக்குழுவினர்.
இந்த நிலையில் அந்த படத்தின் புது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் அட்டகாசமாக உள்ளது. மக்கள் இந்த படத்திற்கு தற்சமயம் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் இதே போல சோனிக் படத்தின் முதல் பாகம் வந்தபோது ரசிகர்கள் சோனிக் நன்றாக இல்லை என கழுவி ஊற்றிய பிறகு படத்தை ரீ எடிட் செய்த சம்பவம் நிகழ்ந்தது.
ஆதி புருஷ் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.