Hollywood Cinema news
Hollywood: அந்த ஹோட்டலுக்கு போனால் பித்து பிடிச்சிடும்.. பாக்கியராஜே புகழ்ந்த பேய் படம்.. ஸைனிங் படக்கதை..
தமிழ் சினிமா மக்களுக்கு எப்போதுமே ஹாரர் திரைப்படங்கள் மீது அலாதியான பிரியமுண்டு. அப்படியாக 1980 லேயே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்தான் ஷைனிங்.
ஆங்கிலத்தில் பேய் கதைகள் எழுதுவதில் புகழ்ப்பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதே போல ஹாலிவுட்டில் புகழ் வாய்ந்த இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதனாலேயே இந்த திரைப்படம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது.
படத்தின் கதை:
ஜாக் டோரன்ஸ் என்கிற எழுத்தாளர்தான் கதை நாயகனாக இருக்கிறார்.ஓவர் லுக் ஹோட்டல் என்கிற ஹோட்டல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இருக்கிறது. இன்னும் திறக்கப்படாத அந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஜாக்கிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் அந்த ஹோட்டல் ஒரு அமானுஷியம் நிறைந்த ஹோட்டலாக இருக்கிறது. தொடர்ந்து அங்கு நிறைய அமானுஷியங்களை பார்த்துக்கொண்டே இருக்கும் கதாநாயகனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பித்து பிடித்தது போல ஆகிவிடுகிறது.
அதனை தொடர்ந்து அவனே தனது குடும்பத்தை கொலை செய்ய நினைக்கிறான். இதற்கு நடுவே அவனது மகன் டானி என ஒருவன் இருக்கிறான். அந்த சிறுவனின் உடலில் இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறது. அது நடக்க போகும் ஆபத்துகளில் இருந்து டேனியை காப்பாற்றுவதற்காக அடிக்கடி டானியை எச்சரிக்கிறது.
டானியின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டாக்டர் ஸ்லீப் என்கிற இன்னொரு திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் டானியும் அவனது தாயாரும் ஜாக் டோரன்ஸிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் கதை.
படத்தின் கதையில் அந்த ஹோட்டலில் இந்த குடும்பத்தை தவிர யாருமே தங்கவில்லை. அதே போல அருகாமையிலும் வேறு கட்டிடங்கள் இருக்கவில்லை. இப்படியான சூழலில் அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் படத்தின் கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.
