தமிழில் உள்ள மூத்த சினிமா விநியோகஸ்தர்களில் முக்கியமானவர் திருப்பூர் சுப்பிரமணியம். சமீபத்தில் அவர் பேசிய பல விஷயங்கள் சினிமா குறித்து மக்கள் நினைத்திருக்கும் எண்ணங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது.
திருப்பூர் சுப்ரமணியன் கூறும் பொழுது உண்மையில் அதிக கோடிகள் சம்பளமாக வாங்கும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
அதனால் இப்பொழுது பெரிய நடிகர்களுடன் உடன்படிக்கை வந்துள்ளனர் அது என்னவென்றால் உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் 50 கோடி என்று வைத்துக் கொண்டால் இயக்குனரிடம் என்னுடைய பேஸ் வேல்யூவிற்கு 50 கோடியை தாண்டி படம் கண்டிப்பாக ஓடும்.
எனவே அந்த பட்ஜெட்டை கூறி யாராவது ஒரு தயாரிப்பாளரை பிடி அந்த 50 கோடிக்கு மேல் 10 கோடி வைத்து அறுவது கோடியாக அவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று ஹீரோக்கள் கூறுகின்றனர்.
படம் எடுக்கப்பட்டு வெளியாகி ஒரு 150 கோடிக்கு ஓடுகிறது என்று வைத்துக் கொண்டால் அதில் 60 கோடியை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு மீதத்தை ஹீரோக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படித்தான் பெரிய ஹீரோக்களின் திரைப்படம் நிலவரம் சென்று கொண்டுள்ளது. ஆனால் வெளியில் வந்து 150 கோடி ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறிக் கொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.