Connect with us

லவ்வர்ஸ் டே முன்னிட்டு சிறப்பான படம்!.. குட் நைட் மணிகண்டன் நடித்த லவ்வர் படம் எப்படி இருக்கு!..

true lover

Movie Reviews

லவ்வர்ஸ் டே முன்னிட்டு சிறப்பான படம்!.. குட் நைட் மணிகண்டன் நடித்த லவ்வர் படம் எப்படி இருக்கு!..

Social Media Bar

காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் காதல் திரைப்படங்கள் வெளியாவது என்பதெல்லாம் எப்போதாவது நடக்க கூடிய சமாச்சாரமாகும். அந்த வகையில் இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு குட் நைட் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக குட் நைட் மணிகண்டன் இருக்கிறார். மணிகண்டன் திரைப்படங்களுக்கும் கூட தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நாளை வெளியாகவிருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு போட்டியாக ட்ரூ லவ்வர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு முதலில் லவ்வர் என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் ட்ரூ லவ்வர் என மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒளிப்பரப்பான ப்ரிவீவ் ஷோ மூலமாக ட்ரூ லவ்வர் படத்தின் கதை என்னவென்று தெரிந்துள்ளது.

லிவ் இன்னில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் காதலர்களின் வாழ்க்கையை கூறும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளது. மணிகண்டனும் கவுரி பிரியாவும் காதலர்களாக திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

முதலில் இவர்களது காதல் சுமூகமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்குள் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. இருவரும் பிரிய இருக்கும் சமயத்தில் ஒரு பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அவர்களுக்கு இடையே உள்ள காதலை வெளிப்படுத்த இந்த பயணம் எப்படி உதவுகிறது என்பதாக கதை செல்கிறது. கிட்டத்தட்ட ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் கதையம்சத்தை ஒட்டி இருந்தாலும் மணிக்கண்டணின் மாறுபட்ட நடிப்பின் காரணமாக இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் பிரபுராஸ் வியாஸிற்கு இது அவரது முதல் படமாகும்.

மேலும் புதிய தலைமுறையினருக்கு ஜோ மாதிரியான காதல் திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே இந்த படம் கண்டிப்பாக 2கே கிட்ஸிற்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top