லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. பல நாள் ஏக்கமாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என லியோ பட தயாரிப்பாளர் போராடி வரும் நிலையில் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை புக்கிங் ஓபன் ஆன பெரும்பான்மை திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கும் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
லியோ படத்தை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க. லோகேஷ் கனகராஜுக்கு தனி ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது. இருதரப்பு ரசிகர்களது எதிர்பார்ப்புமே இந்த லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா? என்பதாகதான் இருக்கிறது.
முன்னதாக லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் கைதி படத்தின் கேரக்டர்கள், காட்சிகள் இணைத்திருந்தார். இதன் மூலம் அடுத்து விக்ரம் 2வில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி என ஒரு நடிகர் பட்டாளமே உள்ளே இறங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கைதி 2, ரோலெக்ஸ் ஆகிய படங்களும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் வரிசையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டபோது LCU என ஹேஷ்டேக் போட்டு கண்ணடிக்கும் எமோஜியை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் லியோ படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில்தான் வருகிறது என்பதை உதயநிதி லீக் செய்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.








