News
லவ் டுடே படத்துல வர்ற மாதிரி ஃபோனை மாத்திக்குவோம்! – அம்மாவின் முடிவால் அதிர்ந்த உதயநிதி.!
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லவ் டுடே. எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்ததால் படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தனது தாயை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் உதயநிதி.
இந்த திரைப்படம் இந்த கால ட்ரெண்டில் உள்ள ரசிகர்களுக்கு பிடிக்கும், ஆனால் பழைய ஆட்களுக்கு பிடிக்காது என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் உதயநிதியின் அம்மாவிற்கு இந்த படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.
திரையரங்கை விட்டு வெளியே வந்தவர் உதயநிதியிடம் “படம் நன்றாக இருக்கிறது. நீதான் வாங்கி வெளியிட்டாயா?” எனக்கேட்டுள்ளார்.
பிறகு படத்தில் வருவது போலவே உங்கள் அப்பா போனையும், உன் போனையும் என்கிட்ட குடு. நாமளும் போனை மாத்திக்குவோம் என கூறியுள்ளார் உதயநிதியின் அம்மா.
அதெல்லாம் வேண்டாம் அம்மா என பதறியுள்ளார் உதயநிதி. இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.
