News
அவருக்கிட்ட கால் ஷூட் கிடைக்குமான்னு பயந்துட்டு இருந்தேன் – தனது படம் குறித்து மனம் திறந்த வடிவேலு
வெகு காலங்களுக்கு பிறகு வடிவேலு நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் நாயை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வடிவேலு நடிக்கிறார்.

வடிவேலு படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் வடிவேலு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூறும்போது ”படத்திற்கு பெயர் வைத்த உடன் இசையமைக்க யாரை நிர்ணயிக்கலாம் என யோசனையில் இருந்தோம். சந்தோஷ் நாராயணனை கூப்பிடலாம் என்றால் அவர் மிகவும் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் அவர்கிட்ட நமக்கு கால்ஷூட் கிடைக்குமா? என்ற ஒரு பயத்துலேயே சந்தோஷ் நாராயணனுக்கு கால் செய்ததாக” வடிவேலு கூறுகிறார்.
எதிர்பாராத விதமாக வடிவேலு நடிக்கிறார் என கூறியதுமே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார் சந்தோஷ் சிவன். படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள் வருகின்றன. நான்கு பாடல்களையுமே வடிவேலுவே பாடியுள்ளார் என்பது சிறப்பு செய்தி.
